மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி திரு.பி. மதுசூதனன் அவர்கள் நேற்று (20.08.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க. தர்ப்பகராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.


































