திருவண்ணாமலை மாவட்டத்தில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 3520 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி I.A.S., தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு 7.12.2019 ஆம் தேதி அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 860 கிராம ஊராட்சிப் பகுதிகளில் 3520 வாக்குச்சாவடி மையங்களில் 27.12.2019 மட்டும் 30.12.2019 ஆகிய இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. உறுப்பினர் பதவி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 860 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 6207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் பல இடங்களுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி 5 மணியுடன் முடிவடைகிறது.

27.12.2019 – தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்

Anakkavur
Cheyyar
Kilpennathur
Pernamallur
Thandarampet
Thellar
Thurinjapuram
Tiruvannamalai
Vembakkam

30.12.2019 – தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்

Arni
Chengam
Chetpet
Jawadhu Hills
Kalasapakkam
Polur
Pudhupalayam
Vandavasi
West Arni