Masked Aadhar பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள்!

Masked Aadhaar என்பது பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்-ஆதாரில் ஆதார் அட்டையின் எண்ணை மறைக்கும் ஒரு வசதியாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் “xxxx-xxxx” போன்ற சில எழுத்துக்களாக மாற்றப்படும். உங்களது ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். masked ஆதாரை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதியைப் பெறுவதற்கு ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும்.

1. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு, ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும்.

2. Aadhaar/VID/Enrolment ID என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Masked Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும்.

3. தேவையான விவரங்களை உள்ளிட்டு ‘Request OTP’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

4. ஓடிபி எண்ணைப் பதிவிட்டு ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும். உடனே உங்களது Masked Aadhaar டவுண்லோடு ஆகிவிடும்.

5. பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த Masked Aadhaar கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும். இதற்கான கடவுச்சொல் – பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள், பின்னர் பிறந்த வருடம்.