திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – ஒன்பதாம் நாள் இரவு !
December 6, 2022, 11:23 718 views
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒன்பதாம் நாள் இரவு (05.12.2022) பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.