திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரமணா ஆசிரமத்தில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தினர். இந்த புனித தருணத்தை காண ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு செய்தனர்.








































