மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் நேற்று (13.01.2026) திருவண்ணாமலை மாநகராட்சி திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு. கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சி.என். அண்ணாதுரை (திருவண்ணாமலை), திரு. எம்.எஸ். தரணிவேந்தன் (ஆரணி), சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மு.பெ. கிரி (செங்கம்), திரு. பெ.சு.தி. சரவணன் (கலசபாக்கம்), திரு. ஒ. ஜோதி (செய்யார்), திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் திருமதி. நிர்மலா வேல்மாறன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

































