கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




































