Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை (30.09.2022) மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல, பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செப்.30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் மாற்றி இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் விவரம்:

பேருந்து நிலையம்இயக்கப்படும் பேருந்துகள்

தாம்பரம்

Mepz சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்

(வழி: திண்டிவனம் மார்க்கம்)

நெய்வேலி, சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார் கோவில்

(வழி: விக்கிரவாண்டி, பண்ருட்டி மார்க்கம்)

வந்தவாசி, சேத்பட், போளூர்.

பூந்தமல்லி பைபாஸ்

(மா.போ.க பூந்தமல்லி பணிமனை அருகில்)

காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சித்தூர், திருப்பதி, திருத்தணி.

கோயம்பேடு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

புதுச்சேரி, கடலூர் & சிதம்பரம் (வழி: ECR)

மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரம் & குருவாயூர்.