Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் ஹவுரா சிறப்பு ரயிலும், ஆரணியில் தாதர் சிறப்பு ரயிலும் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு!

புதுச்சேரி- தாதர் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஆரணியில் செப்- 17ம் தேதி முதல் தாதரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது அதிகாலை 3:33 மணிக்கு நிறுத்தப்பட்டு 3:34 மணிக்கு புறப்பட்டுசெல்லும்.

புதுச்சேரியில் இருந்து தாதர் செல்லும்போது நள்ளிரவு 11:51 மணிக்கு நிறுத்தப்பட்டு 11.52 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

ஹௌராவிலிருந்து இருந்து புதுச்சேரி செல்லும்போது திருவண்ணாமலையில் அதிகாலை 5:13 மணிக்கு நிறுத்தப்பட்டு 5.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

புதுச்சேரியிலிருந்து இருந்து ஹௌராவுக்கு செல்லும்போது திருவண்ணாமலையில் பிற்பகல் 3:56 மணிக்கு நிறுத்தப்பட்டு 3.58 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.