Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

திருவண்ணாமலையில் நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் முன்பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் நோக்குடன் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வருகிற 4.12.2021 (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை யில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இம் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை¸ ஐ.டி.ஐ.¸ பாலிடெக்னிக்  கல்வித் தகுதியுடையவர்கள்  கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ்  புகைப்படம்¸ குடும்ப அட்டை¸ சாதிச்சான்று¸ கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04175 – 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு¸ விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.