திருவண்ணாமலையில் மே 13-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 20-க்கும் மேற்பட்ட முன்னனி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04175-233381 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் திரு.பா.முருகேஷ் தெரிவித்தாா்.