திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 2026 பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று, மூலவர் அண்ணாமலையார்-உண்ணாமலை அம்மன் மற்றும் உற்சவர் பெரியநாயகர்-பெரியநாயகி அம்மனுக்கு தனித்தனியாக, கருவறை மற்றும் உற்சவ மண்டபத்தில் இருமுறை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வில் மாலை மாற்றுதல், நலங்கு, பூப்பந்து விளையாட்டு சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன.






































