திருவண்ணாமலை மலையில் நேற்று (26.11.2023) மகாதீபம் ஏற்றப்பட்டது!

2023 கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை நேற்று (26.11.2023) காலை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி சன்னதிக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் சிவாசாரியார்களால் இருபது பரணி தீபங்கள் ஏற்றப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.

பின்னர் பரணி தீபம் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அர்ச்சகர் மூலம் தீபம் ஏற்றப்பட்டதால் ஏராளமானோர் தீபத்தை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை மலையில் 2668 உயரத்தில் உள்ள மகா தீபம் நேற்று (26.11.2023) மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி 2 நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்.