பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை மார்ச் 3 இன்று இயக்கப்படும். காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை வந்து அடையும்.
மறுமாா்க்கத்தில் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.15 மணிக்கு விழுப்புரம் வந்து அடையும்.
இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், தண்டரை நிலையங்களில் நின்று செல்லும்.

































