i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்டம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன்  ஆதார்‌ எண் இணைக்கும் பணி!

இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ அறிவுரையின்படி வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்று உள்ளவர்களின்‌ ஆதார்‌ எண்‌ இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை) சிறப்பு நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆதார் எண் விவரங்களை பெற உள்ளனர். அப்போது வாக்காளர்கள் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இனைத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.