
முன்னுரை:
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.
ஆய்வு பொருள்:
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.
ஆய்வு நோக்கம்:
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது.
ஆய்வு மூலங்கள்:
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.
ஆய்வு எல்லை:
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.
மலையாளி மக்கள் அறிமுகம்:
தமிழக மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்திலுள்ள சவ்வாது மலையானது கடல்மட்டத்திலிருந்து சராசரி 3000 அடி உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது.அங்கு இந்து மலையாளி இன மக்கள் 279 கிராமங்களில் (குடில்களில்) வசித்து வருகின்றனர். ஆண்கள் 23,952 பேரும் பெண்கள் 23,129 என்ற கணக்கு விகிதத்தில் உள்ளனர். இவர்கள் கல்வியிலும் தொழில் ரீதியிலும் முன்னேறிய பழங்குடியினராகக் காணப்படுகின்றனர்.
ஆட்சி எல்லை:
- மாவட்டத்தின் பெயர் – திருவண்ணாமலை மாவட்டம்
- ஊராட்சி பெயர் மற்றும் நிலை – ஜமுனா மத்தூர் நான்காம் நிலை
- வருவாய் கிராமங்கள் – 5, 36 (சவ்வாது மலைக் குன்றுகள்)
- பரப்பளவு – 33,0004 ஹெக்டெர்
- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் – 279
முடிவுரை:
எனவே சவ்வாது மலைவாழ் பழங்குடிகளான மலையாளி இன மக்களின் வாழ்க்கை முறை ஆகும். நமது சிதிலமடைத் நகல்களான நம் முன்னோர்களே இவர்களால், காலத்தால் இடத்தால் ஆதலால் மட்டுமே வேறுபடுகின்றனர். ஜமுனாமுத்தூர் இருந்து பரமனந்தல் செல்லும் வழியில் மேல் பட்டு என்ற கிராமத்தில் 1890 இல் கட்டப்பட்ட "கண்ணாடி மாளிகை" என்ற பயனியர் விடுதி உள்ளது. இங்கு தங்க திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி செல்ல வேண்டும்.
































