i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்!

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் வரும் மே 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் புதன்கிழமை 28ஆம் தேதி வரை ஜமாபந்தி முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறுகிறது.

பொது மக்கள், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா, சிட்டா, வரி விவரங்கள் மற்றும் உரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான திருத்தங்களை செய்யவும் இந்த ஜமாபந்தி நாட்களில் பங்கேற்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.