i5 Sunrise City Property Promo Banner
பத்திரப்பதிவின் போது சொத்தானது  நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டியது அவசியம் - பதிவுத்துறை உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த விதமான பதிவும் மேற்கொள்ளக்கூடாது என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று அல்லது உறுதிமொழி பெற வேண்டியது அவசியம். எனவே நிலத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு முன்பு மக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.