Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
கான்கிரீட் தயாரிப்பு துறையில் பேட்சிங் பிளாண்ட் இயக்குபவருக்கான அரசின் இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்

டிகிரி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே லட்சக்கணக்கில் தமிழகத்தில் மட்டுமே இருக்கும் பொழுது, பள்ளி படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு பலர் இருப்பர். அப்படி இருக்கும் நபர்களுக்கு, தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. திறன் தமிழ்நாடு, தமிழக அரசு, நான் முதல்வன் திட்டம் மற்றும் ஸ்விங் ஸ்டெட்டர் என்ற கான்கிரீட் தொழில் சார்ந்த நிறுவனம் ஆகியவை இணைந்து

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதோடு வேலைவாய்ப்பையும் வழங்குவதற்கான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் யார் சேரலாம் எப்படி செய்வது? என்ன பயிற்சி வழங்கப்படும்? எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எங்கே பயிற்சி நடைபெறுகிறது? என்ற அனைத்து தகவல்களையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மிஸ் செய்து விடாதீர்கள்.

பயிற்சி பற்றி:
பேட்சிங் பிளாண்ட் ஓப்பரேட்டர்களின் முக்கிய பொறுப்பாக, துல்லியமான மற்றும் செயல்திறன் வாய்ந்த கான்கிரீட் தயாரிப்பை உறுதிப்படுத்தும் பணியை மேற்கொள்வதும், இயந்திரங்களை இயக்குவதும், தேவையான உதிரி பொருட்கள் பராமரிப்பும் மற்றும் கலவை தரத்திற்கேற்ப இருக்கிறது என்பதை கண்காணிப்பதும் அடங்கும்.

தகுதிகள்:
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வரை வயது வரை உள்ளவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.

பயிற்சி விவரம்:
பயிற்சி காலம்: 210 மணி நேரம்
பயிற்சி முறை: இந்த பயிற்சியை நேரடியாக வந்து மட்டுமே கற்றுக்கொள்ள இயலும்.
பயிற்சி இடம்: திருவண்ணாமலை

ஊதிய விவரம்:
பயிற்சி முடிந்தவுடன் ஸ்விங் ஸ்டெட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைக்கு சேரும் நபர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் 715,000 வழங்கப்படும்.

கட்டணம்:
இந்த அரசு வழங்கும் பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இந்த பயிற்சியில் நீங்களும் சேர விரும்பினால்
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3409 என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.