New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு  சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.08.2025
பயிற்சி துவங்கும் தேதி: 12.08.2025
பயிற்சி நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை நகல்

  • வாக்காளர் அடையாள அட்டை நகல்

  • குடும்ப அட்டை நகல் (PHH அல்லது AAY வகை)

  • 100 நாட்கள் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பத்தின் வேலை சான்று (வழங்கப்படும் PIP அல்லது BPL சான்றிதழ்)

  • Passport Size Photo (2)

  • PAN Card Copy

  • TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல்

  • வங்கி பாஸ் புக் நகல்

விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் :

  • வயது: 19 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • பாலினம்: ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்

  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • பயிற்சியில் சேரும் அனைவருக்கும் காலை மற்றும் மாலை தேனீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்

  • பயிற்சியில் தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்

  • கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு: 04175 – 220310
இடம்: நெ.143/74,முதல் தளம், இராமலிங்கனார் மெயின் ரோடு, திருவண்ணாமலை – 606 601

திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!