Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்களுக்கு சென்றோ விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.