i5 Sunrise City Property Promo Banner
உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்!

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று உருவாகி வலுப்பெற்றுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது