அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது ..!!

மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று (29.05.2023) முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2-ம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 போ் பதிவு செய்திருந்தனர். அதில் 2 லட்சத்து 44,104 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனர். இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.