Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now

சின்னையன் பேட்டைக் குளம் அல்லது சின்னியம்பேட்டை குளம் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தானிப்பாடி என்ற ஊருக்கு அருகில் அரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சின்னையன் பேட்டை என்னும் சிற்றூரில் உள்ள குளம் ஆகும். இக்குளம் பாலியல் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது. இக்குளத்தில் விதவிதமான பாலியல் உறவுகளை விளக்கும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

இக்குளம் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 120 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்குளம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியை ஆண்ட சின்னைய நாயக்கன் அல்லது சின்னம நாயக்கன் என்பவன் தனது மகளின் பயன்பாட்டுக்காக இக்குளத்தைக் கட்டியதாகக் கருதப்படுகிறது.

குளத்தைப்பற்றிய செவிவழிக் கதை :

இக்குளம் பாலுணர்வுச் சிற்பங்களுடன் கூடியதாகக் கட்டப்பட்டதற்கான காரணம் குறித்து சரியாகத் தெரியவில்லை. ஆனால், இதுகுறித்துப் பல்வேறு செவிவழிக் கதைகள் உள்ளன. அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஒருவன் தன் மகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்வித்து கணவன் வீட்டுக்கு அனுப்பினான். திருமணம் செய்து சென்ற மகள் கணவனைத் துறந்து பிறந்த வீடு வந்தாள். அவளுக்குத் தாம்பத்திய வாழ்க்கைப் பற்றி தெரியாததே காரணம் என்பதை அறிந்து, மனம் நொந்து தன் மகளுக்குக் கலவி பற்றி அறிந்து கொள்ளும் விதமாக அப்பெண் குளிக்க ஒரு குளத்தை வெட்டுவித்து அக்குளத்தின் படிகளில் விதவிதமான உடலுறவு சிற்பங்களை செதுக்கிக் கட்டினான். குளிக்க குளத்துக்குச் சென்ற மகள் அனைத்தையும் அறிந்து கணவனுடன் வாழச் சென்றாளாம்.

அழிவின் விளிம்பில் சிற்பக் குளம்: பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை :

சின்னியம்பேட்டை – சிற்பக்குளம்

திருவண்ணாமலை மாவட்டம் தண் டராம்பட்டு என்ற ஊரில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் கீழ்ராவந்தவாடி என்ற கிராமத்தில் உள்ள சிற்பக் குளம் புதர்கள் மண்டி, சிற்பங்கள் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்க்கப்பட்டு சிதில மடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

16-ம் நூற்றாண்டு

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் தமிழ்செல்வன் கூறும்போது, “குளத்தில் சிற்பங்களை செதுக்கி வைப்பது என்பது 16-ம் நூற்றாண் டில் நாயக்கர் மன்னர்கள் காலத் தில் நடைமுறையில் இருந்தது. அவர்கள் ஆட்சி செய்த, தண்ட ராம்பட்டு வட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் அக்காட்சிகளை காண லாம். அவர்கள் இரு குளங்களை வடிவமைத்துள்ளதாக வரலாறு கூறுகிறது. ஒன்று மட்டும் கண்டெடுக் கப்பட்டு, தமிழக தொல்லி யல் துறை பாதுகாக்கிறது. மற் றொரு குளம் தேடப்பட்டு வந்த நிலையில், கீழ்ராவந்தவாடி கிராமத் தில் இருப்பது தெரியவந்தது.

சிற்பங்களின் அதிசயம்
ராமயாணம், மகாபாரதம், பெரிய புராண காட்சிகள், கலவி மற்றும் புணர்ச்சி சார்ந்த பல்வேறு நிலை சிற்பங்கள், சிவபெருமானை கண்ணப்ப நாயனார் வணங்கும் காட்சிகள், போர்க் காட்சிகள், மூன்று நிலைகளில் உள்ள படிக்கட்டுகளில் விலங்குகள் மற்றும் மதம் பிடித்த யானையை ஒரு மாவீரன் அடக்குவது போன்ற புடைப்பு சிற்பங்கள், அக்குளத்தில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், குளத்தின் நான்கு வழிகளின் நுழைவு வாயில்களில் 8 நந்திகள் மற்றும் நான்கு திசைகளில் 4 நந்திகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றுமட்டும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

புடைப்புச் சிற்பங்கள் பதிக் கப்பட்ட மூன்று நிலை படிக்கட்டுகள் பெயர்க்கப்பட்டு உள்ளன. புதர்கள் மண்டிக் கிடக்கிறது. வரலாற்றுச் சுவடு குறித்த பெருமை அறியப் படாததால், அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டது. அவை பாது காக்கப்பட வேண்டும். கீழ்ராவந்த வாடி சிற்பக் குளத்தை மீட்டு தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

சமூக ஆர்வலர் ரமணஜோதி கூறும்போது, “தண்டராம்பட்டு கிராமத்தில் வசிப்பதால், கீழ்ராவந்தவாடி சிற்பக் குளத்தை 1972-ல் பார்த்துள்ளேன். பெரிய மலையில் இருந்து காட்டு ஓடை வழியாக வரும் தண்ணீர், சிற்பக் குளத்தில் நிரம்பி தண்டராம்பட்டு ஏரிக்கு செல்லும். சிற்பக் குளத்தின் பெருமைகள் தெரியவந்ததும், அதனை சீரமைக்கும் முயற்சியை கிராம மக்கள் உதவியுடன் மேற் கொண்டுள்ளேன். புதர்கள் மற்றும் முள் செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதுதொடர்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். குளத்துக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு வரும் நான்கு வழிகளும் மறைக்கப்பட்டுவிட்டன. குளத்தை பாதுகாக்க ஆட்சியர் அ.ஞானசேகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.