New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு  தண்ணீர் திறந்துவிட முதல்வர்  ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020 முதல்‌ 29.11.2020 வரை 12 நாட்களுக்கு, 252.26 மில்லியன்‌ கன அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிட முதல்வர் ஆணையிட்டுள்ளார் .

இதனால்‌, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டத்தில்‌ உள்ள 4498.25 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ எனவும், விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்‌.