திருவண்ணாமலையில் ரூ. 38.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



































