அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று (25.06.2023) இரவு ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.