திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் உத்தரவின்படி, 2 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை வட்டாட்சியராக இருந்த கே. துரைராஜ் தண்டராம்பட்டு வட்டத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு பணியாற்றிய எஸ். மோகனராமன் திருவண்ணாமலை வட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியராக செங்கம் மண்டல துணை வட்டாட்சியர் என்.திருநாவுக்கரசும், தண்டராம்பட்டு மண்டல துணை வட்டாட்சியராகவும், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் ப.மணவாளனும், செங்கம் (தேர்தல்) துணை வட்டாட்சியராகவும் தண்டராம்பட்டு மண்டல துணை வட்டாட்சியர் விஜயகுமாரும், செங்கம் மண்டல துணை வட்டாட்சியராகவும், செங்கம் துணை வட்டாட்சியராக (தேர்தல்) கே.அழகு பாண்டீஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


































