i5 Sunrise City Property Promo Banner
மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், அணைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நாளை (20.11.2019) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான "சிறப்பு முகாம்" நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் இது நாள் வரை அரசின் உதவித் தொகை எதுவும் பெறாத மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மூன்று புகைப்படம், வாங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நல்வாய்ப்பினை மாற்று திறனாளிகள் அனைவரும் முழுமையாய் பயன்படுத்திக்கொண்டு பயன் அடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர். திரு.K.S. கந்தசாமி IAS அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.