திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (15.08.2025) நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.





































