Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
செண்பகத்தோப்பு அணை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதன் கொள்ளளவு 62 அடி உயரமாகும். இந்த அணை கட்டும் பணி 2007-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால் ஷட்டர்கள் இயங்காததால் தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஷட்டர் சீரமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து ஷட்டர்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நிவர் புயல் மழை காரணமாக நேற்று அணையில் 55 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உபரிநீரை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம்  ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கமண்டல நதி, நாகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 7 ஷட்டர்கள் வழியாக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அ.கோ.படைவீடு ஊராட்சி அடுத்த செண்பகத்தோப்பு அணையின் மதகு கதவுகள் (ஷட்டர்) சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தற்போது அணையில் 41 அடி ஆழம் நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளவான 61 அடி நிரம்பும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் அணையைச் சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

கலசபாக்கம் செய்தியாளர்

முனைவர் அ. அமுல்ராஜ்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படைவீடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை தமிழக அரசால் 12 வருடங்களுக்கு முன் 34 கோடி ரூபாயில் கட்டப்பட்டது பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இதுநாள் வரை அந்த அணை விவசாயிகளின்  பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை 30 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் 46 ஏரியின் நீர் பாசன பிரச்சனையை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு 9.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இது நாள்வரை அணை சீரமைக்கப்படாமல் இருக்கிறது இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 12-11- 2018 திங்களன்று மாலை 3 மணியளவில் போளூர் அண்ணா பூங்கா எதிரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கந்தன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

செண்பகத்தோப்பு அணை
செண்பகத்தோப்பு அணை
செண்பகத்தோப்பு அணை