Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now

120 அடி உயர ஜவ்வாது மலை தொடரில் கர்நாடக கிரி எனும் கோட்டை உள்ளது. இதுவரை யாரும் அறிந்திடாத தமிழ்நாட்டின் மிக உயரத்தில் இருக்கும் கோட்டையை தேடிய பயணம்.

மலை ஏற மூன்று கிலோ மீட்டருக்கு மேல் தரை காட்டின் வழியாக சற்று தொலைவில் மலையின் அடிவாரத்திலே கோட்டையின் மதில் சுவர் மிகவும் பிரமாண்டமாக பீரங்கி வைப்பதற்கு ஏற்ப இவ் கட்டிட கலை இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவ்கோட்டையை ஆங்கிலேயரும் புதுப்பித்து பயன் படுத்தி உள்ளனர் என்று தெரிய வந்தது. பிறகு தொடர்ந்து வழக்கம் போல் நீரின் பாதையை பின் பற்றி அதன் பிறகு குதிரை செல்வதற்கு ஏற்ப அக்காலத்திலே வழித்தடம் இருந்தது இந்த வழித்தடமானது வலைந்து நெலைந்து இருந்தது. அடர்ந்த காட்டு பகுதி.

மலையின் உச்சியில் ஆரம்பமே பிரம்மாண்டமாக மதில் சுவருடன் பெரிய நுழைவாயில் வரவேற்றது. இக்கோட்டை 15 கிலோ மீட்டர் பெரிய பரப்பளவை கொண்டு உள்ளது ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு இடத்தில் உள்ளது.

இந்த கோட்டையில் மதில் சுவர், நுழைவாயில்,தாணிய கிடங்கு, ராஜா குளம், ராணி குளம், சுணைகள், குதிரை லயாம், உரல், அம்மி, பீரங்கி, கல்வெட்டு உடன் கூடிய கிணறு, சிறிய கோயில் போன்ற கட்டிடம், வீர ஆஞ்சநேயர் சிற்பம், மற்றும் ஒரு நுழைவாயில், 5 கிலோ மீட்டர் வரை மதில் சுவர், பார்வை குன்றுகள் என பிரமாண்டமாக இருந்து கர்நாடக கிரி கோட்டை. இது மட்டும் இல்லாமல் கொய்யா தோப்பு, நெல்லி தோப்பு, வெற்றி இலை கொடிகள் அங்கு அங்கு மாமரம் என அக்காலத்தில் அவர்களுக்கு தேவையானதை பயிர் இட்டு உள்ளனர்.

இந்த கோட்டையை இருக்கும் இடம் அனைத்தும் வெவ்வேறு இடத்தில் உள்ளது. கோட்டை மராத்திய காலத்தில் கட்டப்பட்டது மேலும் கோட்டையின் பெயர் கர்நாடக கிரி என்று 140 வருட பழமையான ஆங்கிலேயர் குறிப்பில் உள்ளது ஆனால் கட்ட அமைப்பு உள் உள்ள புடைப்புச் சிற்பங்கள் எல்லாம் விஜயநகர நாயக்கர் காலத்தில் சேர்ந்தவை