
ஜமுனாமுத்தூரிலிருந்து 3 கிமீ தொலைவு சென்றால் அழகான பீமன் நேரர்வீழ்ச்சி உள்ளது. 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது நீர். நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை நடந்தே செல்லலாம் எந்த தடையும் கிடையாது. ஆனந்தமாக குளிக்கலாம் எந்த அதிகாரியும் திட்ட மாட்டார்கள். குடும்பத்தோடு சென்று விளையாடலாம் எந் தொந்தரவும் இருக்காது. ஆனால் மழைக்காலம் முடிந்தபின் தன் எங்கு செல்ல வேண்டும் ஏனெனில் அப்போதுதான் அந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.அபோது வந்தால் தான் ஆனந்தமாக ரசிக்கவோ குளிக்கவோ முடியும்.
ஜமுனாமுத்தூர் டூ பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற மலை கிராமம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3050 அடி உயரம் கொண்ட பகுதியாகும். எவ்வளவு வெயில் அடித்தாலும் எங்கு மற்றும் குளிர்ச்சியாக இருக்கும். கோடை காலத்திலும் ஏசி போட்டது போலவே இருக்கும். இங்கு 1890 ல் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை என்ற பெயர் கொண்ட பயணியர் விடுதி உள்ளது. இங்கு போக பாதைகள் சரியில்லாததால் இங்கு தங்க யாரும் செல்வதில்லை. தங்க விரும்புபவர்கள் திருவண்ணாமலை இல் உள்ள வனத்துறை அதிகரிடம் அனுமதி பெற்று அங்கு தங்கலாம்.


































